இதற்கமைய பயன்படுத்தப்படாத காணிகளை அடையாளம் கண்டு மக்களுக்கு பகிர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்ததுடன் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய 4 இலட்சத்து முப்பத்து ஐயாயிரம் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 4 இலட்சத்து முப்பத்து ஐயாயிரம் காணித் துண்டுகளை எதிர்காலத்தில் பகிர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ. ஏ. கே ரணவக்க தெரிவிக்கையில் நாட்டில் சுமார் 5 லட்சம் மக்கள் காணிகளை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர்.