பட்டதாரி பயிலுனர்களை பணி நிரந்தரமாக்க அரசிடம் கோரிக்கை

பட்டதாரி பயிலுனர்களை பணி நிரந்தரமாக்க அரசிடம் கோரிக்கை
2019 இல் ஆட்சேர்க்கப்பட்ட பயிலுனர்களில் மாகாண சபைக்கு இணைக்கப்பட்டவர்களை விரைவில்  பணி நிரந்தரமாக்குமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
இதுதொடர்பில் அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளருக்கு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் நேற்று (28) கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
 
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
 
2019 இல் ஆட்சேர்க்கப்பட்ட பயிலுனர்களில் மாகாண சபைக்கு இணைக்கப்பட்ட பயிலுனர்களை விரைவில்  நிரந்தரமாக்க கோரிக்கை
 
2019 இல் ஆட்சேர்க்கப்பட்டு  மாகாண சபைக்கு  இணைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு இதுவரை நிரந்தர நியமனம்  வழங்கப்படாமை குறித்து பல்வேறு சந்தர்ப்பத்தில் இதற்கு முன்னதாக உங்களுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இதுவரையில் தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களிலும் ஆட்சேர்க்கப்பட்ட பயிலுனர்களுக்கு பயிற்சி நிறைவடைந்து 10 மாதங்கள் கடந்துள்ள போதும் இன்னும் பணி நிரந்தரமாக்கப்படவில்லை.
 
 
இதுகுறித்து அனைத்து மாகாண பிரதம செயலாளர்களுக்கும் எமது சங்கத்தினால் அறியப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இதுவரை இந்த பயிலுனர்களை பணி நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மத்திய அரசாங்கத்தில் இருந்து மாகாண அரசுக்கு இணைக்கப்பட்ட பயிலுனர்களின் பெயர் பட்டியல் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வெளியிடப்பட்டது.
 
இதுதொடர்பில் நீங்கள் கவனம் செலுத்தி மாகாணசபைக்கு ஆட்சேக்கப்பட்ட பயிலுனர்களை விரைவில் பணி நிரந்தரமாக்க நடவடிக்கைக மேற்கொள்ளுமாறு மீண்டும் கோரிக்கை விடுக்கின்றோம்.
 
இதுவரையில் பணி நிரந்தரமாக்கப்படாதவர்களின் விபரம்
 
கிழக்கு மாகாணம்             86 
வடமேல் மாகாணம்           70
மேல் மாகாணம்                  43
வட மத்திய மாகாணம்     17
மத்திய மாகாணம்             12
வட மாகாணம்                     05
ஊவா மாகாணம்                07
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image