தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
All Stories
மியான்மர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு இலங்கை மீனவர்களுக்கு மியான்மர் குடியரசு மன்னிப்பு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட 13 ஓய்வூதிய நிதிகள் உத்தேச கூடுதல் வரிவிதிப்பிற்குட்பட்டதல்ல என சட்டமா அதிபர் இன்று (02) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக உக்ரைனில் நிர்க்கதியாகியுள்ள ஆறு இலங்கையர்கள், நேற்றும், நேற்று முன்தினமும் போலந்தை வந்தடைந்துள்ளதாக அந்த நாட்டிலுள்ள இலங்கை தூதுவர் தம்மிக்க குமாரி சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் மின்வெட்டு காரணமாக கொவிட் தடுப்பூசிகள் பழுதடையும் சாத்தியம் காணப்படுவதாக பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை - லோகி தோட்ட சந்தியில், மரக்கிளையொன்று முறிந்து வீழ்ந்தமையால், ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புயை ஆறு சந்தேகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் நாளைய தினமும் ஏழரை மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பயனாளிகள் தமது தேவைகளுக்கு ஏற்ப 30% நிதியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
சம்பள உயர்வு உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்கு, அரசாங்கம் உறுதியளித்தவாறு தீர்வு வழங்கவில்லை எனத் தெரிவித்து, 17 சங்கங்கள் இணைந்து இன்று காலை 8 மணிக்கு இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.
நாட்டில் அனைத்து வலயங்களுக்கும் நாளைய தினம் (2) சுழற்சி முறையில் ஏழரை மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் நடைபெறும் இசைக் கச்சேரிகள் உள்ளிட்ட சமூக ஒன்றுகூடல்களால் எதிர்காலத்தில் கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.