EPF, ETF உட்பட 13 ஓய்வூதிய நிதிகள் உத்தேச கூடுதல் வரி விதிக்குட்பட்டவையல்ல!
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட 13 ஓய்வூதிய நிதிகள் உத்தேச கூடுதல் வரிவிதிப்பிற்குட்பட்டதல்ல என சட்டமா அதிபர் இன்று (02) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் மேலதிக வரிச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தும் மனுவொன்று புவனெக அலுவிஹாரேயில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுமீதான விசாரணையின் போது . எச். எம். டி. நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இதனை நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன, உத்தேச சட்டமூலத்திற்கான உத்தேச திருத்தங்கள் நிதியமைச்சின் செயலாளரினால் சட்டமா அதிபருக்கு கையளித்த கடிதத்தையும் நீதிமன்றில் சமர்ப்பித்தார்.
பாராளுமன்றத்தின் குழுநிலையின் போது தொடர்புடைய சட்டமூலத்தில் பல முன்மொழியப்பட்ட திருத்தங்கள் கடிதத்தில் உள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
வருடாந்தம் 2000 மில்லியன் ரூபாவிற்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு 25% மேலதிக வரி விதிக்கும் அரசாங்கத்தின் பாராளுமன்ற சட்டமூலங்களை எதிர்த்து சமகி ஜன பலவேக உட்பட 10 கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.