வீட்டில் இருந்து பணியாற்றும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்படவேண்டும் - ஜே.ஜே. சந்திரசிறி
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதாயின் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களின் சம்பளம் குறைக்கவேண்டியேற்படும் என்று பொதுநிருவாக, உள்விவகார மாகாணசபைகள மற்றம் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலளார் ஜே. ஜே. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
'அருண' செய்திச் சேவைக்கு கருத்து வௌியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தல்
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க என்ன செய்ய வேண்டும்? பிரதமர் விளக்கம்
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் கருத்து
இந்த சந்தர்ப்பத்தில் அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துமாறு முன்மொழிபவர்கள் சம்பள குறைப்புக்கு இணங்குவார்களாயின் உரிய சுற்றுநிருபத்தை வௌியிட தாம் தயார் என்றும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்டளவு செலவிட்டு சேவைக்கு வரும் ஊழியர்களுக்கு வழங்கும் அதே சம்பளத்தை எந்த செலவும் இன்றி வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்குவது அநீதியானது என்று செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
'அருண'