கேஸ் விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு!

கேஸ் விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு!

நேற்றைய தினம் நிலவிய சீரற்ற வானிலையால், கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

 
எனவே, மறு அறிவித்தல்வரை எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக  வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என பொதுமக்களிடம் லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
வழமையான எரிவாயு விநியோகம் குறித்து அறியப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகப் பணிகளை மீள ஆரம்பிப்பதாக லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.
 
இதன்படி, நாளாந்தம் 80 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்திருந்தார்.
 
எனினும், நேற்றைய தினம் நிலவிய சீரற்ற வானிலையால், கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் இன்று காலை அறிவித்துள்ளார்.
 
மேலும் செய்திகள்
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image