அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் அரச ஊழியர்களை அழைக்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ்.ருவன்சந்திர பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ் ருவன்சந்ரவினால் கடந்த 13ஆம் திகதி அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு இந்த விடயம் தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது
நாட்டில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் தமது தமது தலைமையில் கடந்த 12ஆம் திகதி மாகாணசபை பிரதான செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய எரிபொருள் விநியோகம், மின்சார விநியோகம் மற்றும் எரிவாயு விநியோகம் என்பன வரையறைக்கு உட்படுத்தப்பட்டு நாட்டில் தற்போது நிலவுகின்ற சூழ்நிலைக்கு மத்தியில், அரச செலவுகளை குறைக்க வேண்டிய அவசியத்தன்மையை கருத்தில் கொண்டு அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தல், அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் சேவைகளுக்கு அழைத்தல் என்பன தொடர்பில் குறித்த கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.
அத்துடன் அன்றாட கடமைகளை வீட்டிலிருந்து செய்வதற்கும் இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதற்காக வழிசமைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பது பொருத்தமானது என கலந்துரையாடப்பட்டது.
இதன்படி குறித்த அலுவலக பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அத்தியாவசியமான பணிக்குழாமினரை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கும், சேவைக்கு அழைக்கும்போது நிறுவன / திணைக்களப் பிரதானியின் விருப்பத்தை பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலதிக நேர கொடுப்பனவை நிறுத்தும் தீர்மானத்திற்கு தாதியர் சங்கம் கண்டனம்!