இலவச மருத்துவ சேவையை தனியார் மயப்படுத்த அரசியல் தலைமைகள் முயற்சி - GMOA
சுகாதார சேவையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் வகையில், இலவச சுகாதார சேவையை தனியார் மயமாக்க அரசியல் அதிகாரிகள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வதை அவதானிக்க முடிகிறது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறைக்கு நிதி ஒதுக்கீடு, சுகாதார அமைச்சரை நியமித்தல், போதைப்பொருள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, சுகாதார பணியாளர்களின் ஊதியத்தை குறைக்கும் முயற்சிகள் போன்றவற்றில் அலட்சிய போக்கு இருப்பது வாழ்வுரிமை, சுகாதார உரிமை என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இலவச சுகாதார சேவையை தனியார் மயமாக்குவதற்கு முன்னுரிமை மற்றும் தேவையான பின்புலம் தயாரிக்கப்படுகிறது.
மக்களின் வாழ்வுரிமை மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகலை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு, அரச சேவையின் தொடர்ச்சியையும் உகந்ததாகவும் பேணுவது அவசியமாகும்.
தற்போதைய பிரதமரும், மத்திய வங்கி ஆளுநரும் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காமல் வழங்குவதாக உறுதியளித்திருந்தனர்.
தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடியை கருத்திற்கொண்டு மக்கள் எரிபொருள், அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வரிசையில் காத்திருக்கின்றனர். ஆனால் அவசர சிகிச்சை, மரண தருவாயில் அவ்வாறு வரிசையில் காத்திருக்க முடியாது என்பதை அரசியல் அதிகாரிகள் உட்பட அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
“சுகாதார அமைச்சர் இல்லாத நிலையில், எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து பணியாற்றும் சுகாதார ஊழியர்களின் சம்பளத்தை அநியாயமாக குறைக்க நிதியமைச்சும் மற்றும் சுகாதார அமைச்சின் தலைமை நிதி அதிகாரிகள் உட்பட பலருடைய செயற்பாடானாது சுகாதார ஊழியர்களை மேலும் துன்புறுத்தவும் ஏமாற்றவும் எடுக்கும் முயற்சியேயாகும் என்றும் அரச வைத்திய அதிகாரகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.