All Stories
எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் அனுராதா விஜேகோன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள வரி கொள்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும் வரை உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை ஆரம்பிக்க போவதில்லை என விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையில் ஈடுப்பட்டு வந்த அரை சொகுசு பஸ் சேவையை அடுத்த மாதம் முதல் இரத்து செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எந்தவொரு குழுவினரும் பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக பயன்படுத்த இடமளிக்கபோவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
முறைசாரா பெண் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றதா? என்று கேள்வி எழுப்பப்படுமானால் இல்லை என்ற பதிலே மேலோங்கி காணப்படுவதாக ப்ரொடெக்ட் சங்கத்தின் அட்டன் கிளைக்காரியால தலைவி கிரிசாந்தி தமிழ்செல்வம் தெரிவித்தார்.
தேசிய கற்பித்தல் டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் அடுத்த வாரமளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அச்சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெறவேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
ஏப்ரல் 20 ஆம் திகதி முதல், சமய நிகழ்வுகள் தவிர்ந்த, இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக காலிமுகத்திடலைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்காதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் நேற்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெண்களின் வாழ்விற்கான சம்பளம், சேமஇலாப விடயங்கள் மற்றும் தொழில் ரீதியாக கிடைக்க வேண்டிய கௌரவம் என்பவற்றை முறையாக நடைமுறைப்படுத்த கொள்கைகளையும் திட்டங்களையும் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என விடிவெள்ளி மகளிர் அமைப்பின் தலைவி பொன்னையா தெய்வானை கோரிக்கை விடுத்துள்ளார்.
மின்சார விநியோகம், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், தபால் சேவை மற்றும் சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.