பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக ஒரு வருடத்திற்கும் மேல் பணியாற்றி உயிரிழந்த பதுலை தெமோதர பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார், எனவே, அவரது மரணத்திற்கும் நீதி வேண்டும் என ப்ரொட்டெக் தொழிற்சங்த்தின் உப தலைவி கருப்பையா மைதிலி கோரிக்கை விடுத்தார்.
All Stories
உயர்தர விடைத்தாள் மதிப்பீடு தொடர்பாக, 11 பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் 32 மையங்களில் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டாரில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்த நபரொருவரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொது உதவிகள் குறைக்கப்படாமல் தொடர்ந்தும் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்களுக்குள் வீட்டிலிருந்தவாறே தமக்கான கடவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ளும் வகையில் விசேட செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள புதிய நடவடிக்கை குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தகவல் வெளியிட்டுள்ளார்.
அடுத்த பத்து வருடங்களில் கல்வித்துறையை நவீன மயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்ப கல்வியியற் கல்லூரியில் பயிற்சிபெற்ற 7,800 டிப்ளோமாதாரிகளுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதிபர், ஆசிரியர்கள், மக்கள் வங்கியில் பெற்றுக்கொண்ட கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் மக்கள் வங்கியின் தலைவருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பல்துறை அபிவிருத்தி உதவியாளர்கள் 740 பேருக்கு தென் மாகாண அரச சேவையில் கனிஷ்ட தரத்தில் நிரந்தர பதவிக்காக நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
அரசாங்கத்தின் கொள்கை ரீதியான திட்டங்களுடன் இணைந்து செயற்படுமாறு அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
5 ஆயிரம் ரூபா முற்பணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சில ஆசிரியர்கள் உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளதாக நேற்று தகவல் வெளிப்படுத்தப்பட்டது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தரமுயர்வு தொடர்பான அறிவித்தலை அரசாங்கம் வௌியிடடுள்ளது.