-ஆளுநரிடம் கல்வி அமைச்சர் தெரிவிப்பு -
All Stories
"பிரித்தானிய ஆட்சியரே! மலையக மக்களுக்கு நட்டஈடு கொடு!" என வலியுறுத்தி, கொழும்பிலுள்ள பிரித்தானியா உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னாள் நேற்று (30) கவனயீர்ப்பு அமைதிப் போராட்டம் நடத்தப்பட்டது.
வீட்டுப்பணிப் பெண்கள், தூய்மைப்படுத்தல் தொழிலாளர், கட்டட நிர்மானப் பணியாளர் உள்ளிட்டவர்களையும் ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதிக்குள் (ETF) உள்வாங்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சாதாரண தர பரீட்சை இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களிலும், உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் போலி முகவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைவாய்பு பெற்று தருவதாக பலரிடம் இலச்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு அவர்களை சுற்றுலா விசாவில் அனுப்பி ஏமாற்றியது தொடர்பாக ஒரு மாத்தில்4 முறைப்பாடு கிடைத்துள்ளது என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விரைவில் வழங்கப்படவுள்ள கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படவுள்ளது. அதனை உடனே தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெலிக்கடை பொலிஸ் இருந்த நிலையில், உயிரிழந்த 42 வயதான வீட்டுப் பணிபாபெண்ணின் மரணம் தொடர்பான, விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, குற்றப் புலனாய்வு திணைக்களம், நீதிமன்றிற்கு அறியப்படுத்தியுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில், தலவாக்கலை உப பிரதேச செயலகம், நோர்வூட் உப பிரதேச செயலகம் என்பன பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.
பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கரிசனை வெளியிட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களால்;, பல இலங்கையர்கள், பிரித்தானியாவிற்கு கடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் ஸ்கை நியூஸ் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தாம் கல்வி கற்ற அன்றாட சூழலுக்கு மாற்றமான பரிச்சயமற்ற சூழலில் பரீட்சைக்கு முகம் கொடுப்பது மாணவர்களின் மன அமைதிக்கு தடையாக இருப்பதாகவும், எப்போதும் கல்வி அமைச்சும் பரீட்சை திணைக்களமும் தமது வசதிக்காக அன்றி மாணவர்களின் வசதி மற்றும் நலன் கருதி செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
பொலிஸ்காவலின்கீழ் நிகழும் மரணங்கள் தொடர்பில் மீண்டும் கவனம் குவிக்கப்படுவதற்குக் காரணமாகியுள்ள ராஜகுமாரியின் உயிரிழப்பு தொடர்பில் கடும் கண்டனம் வெளியிட்டிருக்கும் சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளைப் பணி இடைநிறுத்தம், பணி இடமாற்றம் செய்வதைவிடுத்து, அவர்களைக் கைதுசெய்து உச்சபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர.
நீதிமன்றத்தின் தடை யுத்தரவை நீக்கி பட்டதாரிகளுக்கான போட்டிப்பரீட்சையை நடத்துவதற்கு சட்ட மா அதிபரின் ஊடாக நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.