ஆசிரியர் சேவை நியமனத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

ஆசிரியர் சேவை நியமனத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

தேசிய கற்பித்தல் டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தேசிய கற்பித்தல் டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு நியமனம் செய்தல் – 2023 (2018-2020) நிலைப்படுத்தலுக்கான விண்ணப்பப் படிவம்
தேசிய கல்வியியல் கல்லூரிகளில் 2018/2020 வருடங்களில் பாடநெறிகளைத் தொடர்ந்த பயிலுனர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான தகவல்கள் நிகழ்நிலை முறைமை மூலமாக சேகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது,
 
அதற்கமைய ncoe.moe.gov.lk ஊடாக, அதில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் பிரகாரம், 2023.04.21 திகதி முதல் 2023.04.25 திகதி வரையில் குறித்த பயிலுனர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
 
 
கருத்தில் கொள்க
 
 
I. ஒரு விண்ணப்பதாரருக்கு நிகழ்நிலை மூலமாக பிரவேசிப்பதற்கு பயனர் பெயராக (username) தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் கடவுச் சொல்லொன்றையும் (password) உபயோகித்து பயனர் கணக்கொன்றை திறத்தல் வேண்டும் என்பதுடன், நிலைப்படுத்தலுடன் தொடர்பான விபரங்கள் வழங்கப்படும் வரையில் முறைமைக்குள் பிரவேசிப்பதற்காக குறித்த பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை தங்கள் வசம் வைத்திருப்பது கட்டாயமாகும்.
 
II. அவ்வாறே நிகழ்நிலை முறைமையினுள் பிரவேசித்து விண்ணப்ப்ப் படிவத்தை முழுமையாக நிரப்பி அதனை முறைமையினுள் submit செய்ததன் பின்னர் ,மீண்டும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்பதனால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை நன்கு வாசித்ததன் பின்னர் தரவுகளை உள்ளீடு செய்தல் வேண்டும்.
 
III. இருப்பினும் கணக்கின் பயனர் பெயர் (username) மற்றும் கடவுச் சொல்லை (password) உபயோகித்து நிகழ்நிலை முறைமை திறந்திருக்கும் காலப் பகுதியில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்களது பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பரீட்சிக்க முடியும்.
 
IV. நிலைப்படுத்தும் போது இணைத்துக் கொள்ளப்பட்ட மாகாணத்திற்கு முன்னுரிமை வழங்கப்படக்கூடிய வகையில் தேசிய கல்வி நிறுவகத்தினால் வழங்கப்பட்ட பெறுபேறுகள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தங்களது பாடத்திற்குரிய திறமை வரிசையை மாத்திரம் கருத்தில் கொண்டு நிலைப்படுத்தல் மேற்கொள்ளப்படும்.
 
V. அத்தியாவசியமான வெற்றிடங்களுக்காக தங்களால் விருப்புத் தெரிவிக்கப்படாதிருந்தாலும், திறமைகள் பட்டியலில் ஆகக் குறைந்த திறமைகளைப் பெற்றுள்ள விண்ணப்பதாரர்களில் இருந்து சேவை அவசியத்தைக் கருத்தில் கொண்டு அத்தகைய அத்தியாவசியமான வெற்றிடங்களை நிரப்புவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதுடன், தங்களுக்குரிய மாகாணத்தில் போதியளவில் வெற்றிடங்கள் காணப்படாத பட்சத்தில், வெற்றிடங்கள் நிலவும் வேறு மாகாணம் ஒன்றிற்கு நிலைப்படுத்தப்படவும் முடியும்.
 
VI. மேலும் உறுதிப்படுத்தப்பட்ட வெற்றிடங்களுக்கு மாத்திரமே நிலைப்படுத்தல் மேற்கொள்ளப்படும் என்பதுடன், அதிபர்களால் முன்னிலைப்படுத்தப்படும் எந்தவொரு கோரிக்கை கடிதமும் ஒரு போதும் கருத்தில் கொள்ளப்படமாட்டாது.
 
VII. மேலே குறிப்பிடப்பட்ட செயன்முறையை முறையாகப் பின்பற்றி பாடங்களுக்குரியதாக தேசிய கல்வி நிறுவகத்தினால் வழங்கப்பட்டுள்ள திறமைகளின் வரிசைப் படி நிகழ்நிலை (online) முறைமையை அடிப்படையாகக் கொண்டு. மாத்திரமே நிலைப்படுத்தல் மேற்கொள்ளப்படுகின்றமையால், தாங்கள் எதிர்பார்க்கும் சேவை நிலையத்திற்கே நியமனம் வழங்குவதாக வாக்குறுதியளித்து, பணம் பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் மோசடி நபர்களிடம் சிக்காமல் தவிர்ந்துகொள்ளுமாறு வலியுறுத்தப்படுகின்றது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image