தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு லட்சம் வரையில் பங்கு இலாபம் - ரொசான் ராஜதுரை

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு லட்சம் வரையில் பங்கு இலாபம் - ரொசான் ராஜதுரை

தோட்டத் தொழிலாளர் சிலருக்கு கடந்த வருட பங்கு இலாபம் சிலருக்கு ஒரு லட்சம் வரையில் கிடைக்கப்பெற்றுள்ளதாக களனிவெளி, தலவாக்கலை மற்றும் ஹொரனை ஆகிய பெருந்தோட்ட நிறுவனங்களின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொசான் ராஜதுரை தெரிவித்தார்.

 

பொது நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்ட போது ஊடகவியலாளர்களால் மின் கட்டண உயர்வு தொடர்பாக கேட்கப்பட்ட போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையானது வருடம் முழுவதும் 2000 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி உள்ள ஒரு நாடாகும் எனவே தேயிலை உற்பத்தியின் போது அதன் தேயிலை தளிரின் ஈரப்பதனை இல்லாமல் செய்வதற்கு விறகு மற்றும் மின்சார பயன்பாடு அதிகம் தேவைப்படுகின்றது என்று தெரிவித்தார்.

மேலும் அதனால் மின் தேவையனது தினமும் அதிகளவில் தேவைப்படும் ஒரு உற்பத்தி துறையாகவே தேயிலை உற்பத்தி காணப்படுகின்றது. இந்நிலையில் மின மற்றும் எரிப்பொருட்களின் விலை அதிகரிப்பானது தேயிலை உற்பத்தியில் மூன்று மடங்குக்கு மேல் உற்பத்தி செலவை அதிகரிக்க செய்துள்ளது என்றும் குறிப்பிட்டார்

இந்நிலையில் 2018ஆம் ஆண்டு வரை மிகவும் நட்டத்தில் இயங்கி வந்த இந்த தொழிற்துறையானது கடந்த ஆண்டு ஓரளவு இலாபத்தில் இயங்கி உள்ளது இவ்வாறு தொடர்ந்தும் தேயிலையின் விலை அதிகரித்தால் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பங்கு இலாபமும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

சில தோட்டங்கில் தொழில் புரியும் தோட்ட தொழிலாளர் சிலருக்கு கடந்த வருட பங்கு இலாபம் சிலருக்கு ஒரு லட்சம் வரையில் கிடைக்கப்பெற்றள்ளது.

எனவே இலாபம் கிடைத்தால் மக்களுக்கும் எமக்கு நல்லது. ஏதேனும் வகையில் விலை குறைந்தால் பங்கு இலாபமும் குறைவடையும் என்றும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image