வௌி பிரதேசங்களில் இருந்து தொழில் திணைக்களத்திற்கு வரவேண்டாம்
ஊழியர் சேமலாப நிதியத்தை பெறல் மற்றும் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை கையளிப்பதற்கு கொழும்பு நாராஹேண்பிட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்திற்கு வருகைத் தர வேண்டாம் என்று தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது நாட்டில் நிலவும் கொவிட் 19 பரவல் காரணமாக தொழில் திணைக்கள பிரதான அலுவலகத்தில் அதிக மக்கள் வருவதை தவிர்த்துக்கொள்ளும் வகையில் ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான சேவைகள் உட்பட அனைத்து சேவைகளையும் ஏனைய மாவட்டங்களில் உள்ள அலுவலங்களில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட , வலய அலுவலங்களில் கையளிக்கப்படும் ஊழியர் சேமலாப நிதியை மீளப்பெறுவதற்கான விண்ணப்பங்கள் அவ்வலுவலங்கள் ஊடாக உடனடியாக இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டாயிற்று. என பொது மக்கள் தமது விண்ணப்பங்களை மாவட்ட மற்றும் வலய காரியாலயங்களுக்கு வழங்கி எவ்வித தாமதமுமின்றி தமது பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். தாமதமாகும் என்று அச்சப்பட தேவையுமில்லை என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு பிரதேசத்தில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றி அந்நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தால் மட்டும் அந்நபர்கள் தமது விண்ணப்பங்களை கொழும்பு பிரதான செயலாளர் அலுவலகத்திற்கு விஜயம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
களுத்துறை, கம்பஹா, கண்டி, காலி, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, பதுளை, திருகோணமலை, குளியாப்பிட்டிய, அநுராதபுரம், அவிஸ்ஸாவல, அம்பாறை, மட்டக்களப்பு, அப்புத்தளை, காலி, கம்பளை, அம்பாந்தோட்டை, ஹட்டன், மாத்தறை, மத்துகம, மொனராகல, மஹாரகம, நீர்கொழும்பு, நுவரெலியா, ஜாஎல, பானந்துறை தெற்கு, கஹவத்த, கேகாலை, குருணாகல, மாத்தளை, பொலன்னறுவ, வவுனியா, புத்தளம், மாவோ, வென்னப்புவ போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள மாவட்ட மற்றும் வலய அலுவலகங்களில் ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக்கொடுப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.