எரிபொருள் நெருக்கடியால் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடைநிறுத்தம்

எரிபொருள் நெருக்கடியால் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடைநிறுத்தம்

எரிபொருள் நெருக்கடியால், கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையின், இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராத சாதாரண தரப் பரீட்சையின் முதலாம்கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த மாதம் 17ஆம் திகதி  முதல் 26 ஆம் திகதிவரை நடைபெற்றது.

இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகளை கடந்த 30ஆம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 9ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், எரிபொருள் நெருக்கடியால், கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையின், இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எரிபொருளை பெற்றுக்கொள்ள ஆசிரியர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதால், இரண்டாம் கட்ட விடைத்தாள மதிப்பீட்டுப்  பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்தவுடன், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை மீள ஆரம்பிக்க உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image