தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்படும் - எச்சரிக்கும் அரச ஊழியர்கள் சங்கம்!

தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்படும் - எச்சரிக்கும் அரச ஊழியர்கள் சங்கம்!

அரச ஊழியர்களுக்கு எரிபொருளை வழங்க  பிரதேச செயலக மட்டங்களில் ஏற்பாடு செய்யாவிட்டால், குறைந்தது 300,000 அரச ஊழியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று, இலங்கை அரச அதிகாரிகள் தொழிற்சங்கம் (SLGOTUA) எச்சரித்துள்ளது.

இலங்கை அரச அதிகாரிகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் பிரதீப் பஸ்நாயக்க நேற்று (21) இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சில அரச அதிகாரிகள் வீடுகளில் இருந்து பணியாற்ற முடியும். எனினும் காலை செய்திக்கு கருத்துத் தெரிவிக்கையில், “சில அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய முடியும். ஆனால், கிராம சேவையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் போன்ற சில வகை அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளைச் களத்திற்குச் சென்று மேற்கொள்ள வேண்டும். கள விஜயத்திற்கு போக்குவரத்து அவசியம். பெரும்பாலான உத்தியோகத்தர்கள் தமது தனிப்பட்ட வாகனங்களை கள விஜயத்திற்கு பயன்படுத்துகின்றனர். தற்போதைய நிலையில் எரிபொருளை பெற முடியாமல் அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம்!

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

 அரச ஊழியர்களுக்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பு: அமைச்சரவை விசேட தீர்மானம்

அரச ஊழியர்களுக்கு 4 நாட்கள் வேலை வாரம் - அமைச்சரவை அனுமதி!

குறிப்பாக அரச உத்தியோகத்தர்கள் எரிபொருள் பற்றாக்குறையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இதுவரை அமைச்சு மற்றும் திணைக்களங்களினூடாக உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தவறியுள்ளது. அரச ஊழியர்கள் நாட்கணக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் போது பொது மக்கள் கடுமையான எதிர்ப்பினை வௌியிடுகின்றனர்.

அரச ஊழியர்கள் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை தமது கடமைகளில் ஈடுபட வேண்டும். இரவு நேரங்களில் களப்பணிகளை மேற்கொள்ள முடியாது. ஓரிரு நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும் போது ஒருவர் எப்படி வேலைக்குச் செல்ல முடியும்? மேலும், பொது போக்குவரத்து சேவைகள் தற்போது இயங்கவில்லை. இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு சகல வழிகளிலும் தெரியப்படுத்தியும் இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை.

''ஒவ்வொரு DS பிரிவிலும் உள்ள அரச ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வதற்கு ஒரு தனி இடத்தை நியமிக்க நாங்கள் முன்மொழிகிறோம். அதன் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்”.

இந்த வாரத்திற்குள் அதிகாரிகள் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள் என்று நம்புகிறோம். அவ்வாறு நடக்காவிடின் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதுவே தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் என்று நம்புகிறோம். எமது தொழிற்சங்கத்தின் 300,000 உறுப்பினர்கள் உள்ளனர். தீர்வு கிடைக்காவிடின் ஜூலை முதல் வாரத்தில் போராட்டம் ஆரம்பிக்கப்படும். எம் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்காத தொழிற்சங்கங்களின் ஆதரவும் பெறப்படும்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, குறிப்பாக வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் குறைந்த அளவே எரிபொருள் வழங்கப்படுவதால், மக்கள் நீண்ட வரிசையில் நீண்ட நாட்கள் காத்திருந்து எரிபொருள் பெற வேண்டியுள்ளது. இந்நிலையில், எரிபொருள் விநியோகம் செய்யும் போது அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசாங்கம் கோரிய போதிலும், அரச ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவுக்கும் பல்வேறு சந்தர்ப்பங்கள் அண்மைய நாட்களாக இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் அரசாங்கம் இரு வாரங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு அறிவித்ததையடுத்து சில பிரிவுகளைச் சேர்ந்த அரச ஊழியர்கள் கடந்த 20ம் திகதி தொடக்கம் வீட்டில் இருந்து பணியாற்ற ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image