அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சில் முக்கியமான ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

தேசிய பாடசாலை / மாகாண பாடசாலை சேவையில் ஈடுபட்டுள்ள மற்றும் அதனை அண்மித்த சேவைகள் எம்என் 4 தர பட்டதாரிகளுக்கு ஆசிரியர் சேவைக்காக சந்தர்ப்பம் வழங்குதல்

விடுமுறை தினங்களில் மற்றும் விசேட விடுமுறை தினங்களில் பாடசாலைகளுக்கு அறிக்கையிட வேண்டி ஏற்படல்.

2018 - 2020 வருடங்களுக்கு அமைய 35 வயதிற்கு குறைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்பதற்கான அடுத்தக்கட்ட வேலைத்திட்டம்.

ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்காமை.

தென்மாகாண சிசு தரன வேலைத்திட்டத்தின்கீழ் உள்ள பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி.

உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த உள்ளிட்ட அதிகாரிகளுடன், அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரிய ஆராய்ச்சி உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் ஈடுபட உள்ளனர்.

இந்த கலந்துரையாடல் கல்வி அமைச்சில் இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான சிங்கள மொழிமூல அறிவித்தல்.

May be an image of text

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image