All Stories

வௌிநாட்டு தொழிலாளர்களை சேவையில் இணைக்க போலி ஆவணங்கள்

வௌிநாட்டு தொழிலாளர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு சில தனியார் நிறுவனங்கள் போலியான ஆவணங்களை சமர்த்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக ஓமான் தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

660 வௌிநாட்டு தொழிலாளர்களை சேவையில் இணைக்க பல தனியார் நிறுவனங்கள் 180 போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளன என்று தொழில் அமைச்சு நேற்று (04) வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பல நிறுவனங்களால் 660 வெளிநாட்டினரை நியமிக்க பணி அனுமதி பெற 180 போலி ஓமானிசேஷன் வழக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
விசாரணையில், அமைச்சினால் வழங்கப்பட்ட வசதிகளைப் பயன்படுத்துவதே இதன் நோக்கம் என்று நாங்கள் கண்டறிந்தோம், ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் தமது சுய லாபத்திற்காக இவ்வாறு செயல்களில் ஈடுபடுகின்றமையானது நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அனத்து குடிமக்களும் தமது உரிமைகளையும் ஏனையோரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு இவ்வாறான உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என்று அமைச்சு அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

 

வௌிநாட்டு தொழிலாளர்களை சேவையில் இணைக்க போலி ஆவணங்கள்

போக்குவரத்து 51,000 திர்ஹம் அபராதம்

போக்குவரத்து ஒழுங்குவிதிகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து புதிய அறிவித்தலொன்றை அபுதாபி பொலிஸார் வௌியிட்டுள்ளனர்.

குறிப்பாக வீதி சமிக்ஞைகள் சிவப்பு நிறத்தில் இருக்கும் போது வீதியை கடக்க முற்படுதலுக்கு பாரிய அபராத தொகையை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. மோட்டார் வாகன சாரதிகள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிவப்பு விளக்கு எரிந்துக்கொண்டிருக்கும் போது அதனை கடந்து சென்றால் 51,000 திர்ஹம் அபராதமும் வீதிகளில் ஓட்டப்பந்தயம் வைத்தல் 50,000 திர்ஹம்களும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான காயங்கள் மற்றும் மரணங்கள் ஏற்படக்கூடிய பொறுப்பற்ற நடத்தைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் கடுமையான தண்டனையை அழைக்கக்கூடிய ஐந்து வெவ்வேறு மீறல்களில் இவை இரண்டு. அபராதம் செலுத்திய பின்னர், உரிமையாளர்களால் உரிமை கோரப்படாத வாகனங்கள், தண்டனை விதிக்கப்பட்ட திகதிக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு ஏலம் விடப்படும் என்றும் காவல்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

போக்குவரத்து 51,000 திர்ஹம் அபராதம்

நூற்றாண்டு விழா காணும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம்!

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் நூறாவது ஆண்டு விழா இம்மாதம் 6ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நூற்றாண்டு விழா காணும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம்!

துறைமுக விவகாரம் - ஒன்றிணையும் அரச நிறுவனங்கள்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திற்கு விற்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக இன்று (01) கொழும்பில் பல அரச நிறுவன தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தின.

தேசிய தொழிற்சங்கங்களின் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று பகல் 12.00 மணிக்கு இப்போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இலங்கை மின்சாரசபை தலைமையகத்திற்கு முன்பாக, கொழும்பு மாநகரசபை முன்பாக, அரச அச்சுத் திணைக்களத்திற்கு முன்பாக, தேசிய வருமான மற்றும் மக்கள் வங்கி முன்பாக, இரத்மலான கொழுமடம சந்தியில் அமைந்துள்ள நீர் வழங்கல் அலுவலகம், தேசிய வைத்தியசாலை முன்பாக மற்றும் களுபோவில, ஜயவர்தனபுர ஆகிய வைத்தியசாலைகள் முன்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன் எதிர்ப்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

துறைமுக விவகாரம் - ஒன்றிணையும் அரச நிறுவனங்கள்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image