வௌிநாட்டு தொழிலாளர்களை சேவையில் இணைக்க போலி ஆவணங்கள்

வௌிநாட்டு தொழிலாளர்களை சேவையில் இணைக்க போலி ஆவணங்கள்

வௌிநாட்டு தொழிலாளர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு சில தனியார் நிறுவனங்கள் போலியான ஆவணங்களை சமர்த்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக ஓமான் தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

660 வௌிநாட்டு தொழிலாளர்களை சேவையில் இணைக்க பல தனியார் நிறுவனங்கள் 180 போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளன என்று தொழில் அமைச்சு நேற்று (04) வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பல நிறுவனங்களால் 660 வெளிநாட்டினரை நியமிக்க பணி அனுமதி பெற 180 போலி ஓமானிசேஷன் வழக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
விசாரணையில், அமைச்சினால் வழங்கப்பட்ட வசதிகளைப் பயன்படுத்துவதே இதன் நோக்கம் என்று நாங்கள் கண்டறிந்தோம், ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் தமது சுய லாபத்திற்காக இவ்வாறு செயல்களில் ஈடுபடுகின்றமையானது நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அனத்து குடிமக்களும் தமது உரிமைகளையும் ஏனையோரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு இவ்வாறான உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என்று அமைச்சு அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image