போக்குவரத்து 51,000 திர்ஹம் அபராதம்

போக்குவரத்து 51,000 திர்ஹம் அபராதம்

போக்குவரத்து ஒழுங்குவிதிகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து புதிய அறிவித்தலொன்றை அபுதாபி பொலிஸார் வௌியிட்டுள்ளனர்.

குறிப்பாக வீதி சமிக்ஞைகள் சிவப்பு நிறத்தில் இருக்கும் போது வீதியை கடக்க முற்படுதலுக்கு பாரிய அபராத தொகையை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. மோட்டார் வாகன சாரதிகள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிவப்பு விளக்கு எரிந்துக்கொண்டிருக்கும் போது அதனை கடந்து சென்றால் 51,000 திர்ஹம் அபராதமும் வீதிகளில் ஓட்டப்பந்தயம் வைத்தல் 50,000 திர்ஹம்களும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான காயங்கள் மற்றும் மரணங்கள் ஏற்படக்கூடிய பொறுப்பற்ற நடத்தைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் கடுமையான தண்டனையை அழைக்கக்கூடிய ஐந்து வெவ்வேறு மீறல்களில் இவை இரண்டு. அபராதம் செலுத்திய பின்னர், உரிமையாளர்களால் உரிமை கோரப்படாத வாகனங்கள், தண்டனை விதிக்கப்பட்ட திகதிக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு ஏலம் விடப்படும் என்றும் காவல்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image