TIN இலக்கம் பெறும் நடவடிக்கையை இலகுபடுத்த நடவடிக்கை!

TIN இலக்கம் பெறும் நடவடிக்கையை இலகுபடுத்த நடவடிக்கை!

வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தை(Taxpayer Identification Number) பெறும் நடவடிக்கையை இலகுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, பொதுமக்களின் தரவுகள் சேகரித்துப் பேணும் அரச நிறுவனங்களினூடாக வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலையூடாக வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக மிகவும் இலகுவான நடைமுறையொன்றை தயாரிக்கும் நோக்கில் சட்டரீதியான சிக்கல்கள் இல்லாத நிறுவனங்களில் இருந்து தகவல்களை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனிநபர் ஒருவரின் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை குறிப்பிட்ட நபரின் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், 2024 பெப்ரவரி 01 முதல் வரி அடையாள எண்ணை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் அறிவித்தார்.

வரி செலுத்துனர் அடையாள எண் பெற்றுக்கொண்டார் என்பதற்காக ஒருவர் வருமான வரி செலுத்தும் பொறுப்புக்குள்ளாவார் என்று அர்த்தமல்ல. ஆண்டு வருமானம் வருடத்திற்கு 1.2 மில்லியனாக பெறுபவரே வருமான வரி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கணக்கை ஆரம்பிப்பதற்கும், கட்டிட நிர்மான திட்ட அனுமதி, மோட்டார் வாகன பதிவு, நில உரிமை பதிவு போன்ற செயற்பாடுகளுக்கு வரி செலுத்துநர் அடையாள இலக்கம் அவசியம் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image