வீட்டுப் பணிப்பெண்களை சேவையில் இணைக்க சவுதி கட்டண குறைப்பு

வீட்டுப் பணிப்பெண்களை சேவையில் இணைக்க சவுதி கட்டண குறைப்பு

வீட்டுப் பணிப்பெண்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் போது அறவிடும் தொகையை குறைப்பதற்கு சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது.

பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ், உகாண்டா, கென்யா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களை சேவையில் இணைப்பதற்கு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அதற்கமைய பிலிப்பைன்ஸ் பெண்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கான கட்டணத்தை 15,900 சவுதி ரியாலில் இருந்து 14,700 சவுதி ரியாலாகவும் இலங்கைக்கு 15,000 சவுதி ரியாலில் இருந்து 13,800 சவுதி ரியாலாகவும் பங்களாதேஷுக்கு 13,000 சவுதி ரியாலில் இருந்து 11,700 ரியாலாகவும் கென்யாவுக்கு 10,870 சவுதி ரியாலில் இருந்து 9,000 ரியாலாகவும் உகாண்டாவுக்கு 9,500 சவுதி ரியாலில் இருந்து 8,300 சவுதி ரியாலாகவும் எத்தியோப்பியாவுக்கு 6,900 சவுதி ரியாலில் இருந்து 5,900 சவுதி ரியாலாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

வீட்டுப் பணிப்பெண்களை சேவையில் இணைக்கும் போது அந்தந்த நாட்டு தனிநபர்கள் செலுத்த இயலுமைக்கு ஏற்பட இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image
© 2024 Wedabima.lk. All Rights Reserved
Design by Vishmitha.com