சம்பளம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி போராட்டம் - பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம்

சம்பளம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி போராட்டம் - பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம்

இன்று (19) காலை தொடக்கம் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக யாழ்ப்பாண  பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் 11.03.2024 மற்றும் 18.03.2024 திகதியிடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதங்களின் பிரகாரம் இவ்வடையாள வேலைநிறுத்தப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிற்கு உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் இதுவரை தீர்வினை வழங்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடித் தீர்வினை வழங்குமாறு கோரி இப்பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலை 11 மணியளவில் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image