கடவுச்சீட்டுக்களை வழங்கும் சாதாரண சேவை நாளை (09) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
கணனித் தொகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சேவை நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவை நாளை ஆரம்பிக்கப்படாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே நாளை (09) மே மாதம் 5,6, மற்றும் 9ம் திகதிகளுக்கு சாதாரணசேவைக்காக நேரம் ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை கையளிப்பதற்காக திணைக்களத்திற்கு வருகைத் தந்து இலக்கம் அல்லது முத்திரை பெற்றுக்கொண்டவர்கள் ஆகியோருடைய விண்ணப்பங்கள் மாத்திரமே பொறுப்பெடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மே மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் கடவுச்சீட்டை கையளிப்பதற்காக நாள் மற்றும் நேரம் ஒதுக்கிக்கொள்வது கட்டாயம் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது
இதற்கு மேலதிகமாக http://www.immigration.gov.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசித்து அல்லது 0707101060 தொலைபேசி இலக்கத்தில் தொடர்பகொண்டு நாள் மற்றும் தினத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தொடர்பான செய்திகளுக்கு
குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் வழமைக்கு
கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் ஏற்பது தற்காலிகமாக இடைநிறுத்தம்