மத்திய கிழக்கு தொழில்வாய்ப்பினை நாடி செல்வோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு!

மத்திய கிழக்கு தொழில்வாய்ப்பினை நாடி செல்வோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு!

இலங்கையிலிருந்து வௌிநாட்டுத் தொழில் வாய்ப்பினை நாடி செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

அனுமதி பெற்ற வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் சங்கத்தின் தகவலுக்கமைய, நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க இந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் ஏப்ரல் 8ம் திகதி வரையில் சுமார் 100,000 பேர் வரை வௌிநாட்டு வேலைவாய்ப்புக்களை நாடி புலம்பெயர்ந்துள்ளனர்.

தற்போது இலங்கையர்களுக்கு வௌிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் பாரிய கேள்வி நிலவுகிறது. குறிப்பாக நாட்டின் நிலைமையும் இதற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் நிலைமையை தௌிவாக குறிப்பிடுவதாக இருந்தால் 2020 இல் 53,711 ஆக இருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பினை நாடி செல்வோரின் எண்ணிக்கை 2021 இல் 126.8 சதவீதம் அதாவது 121,795 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, கடந்த ஆண்டு பயிற்சி பெறாத மற்றும் வீட்டுப் பணிப்பெண்களாக தொழில் வாய்ப்பினை நாடுவதை விடவும், நிபுணத்துவம் மிக்க, பயிற்சி பெற்ற, நடுநிலை பயிற்சி பெற்ற தொழில்வாய்ப்பினை நாடி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, வீட்டுப் பணிப்பெண்கள் வேலை வாய்ப்புக்காக வெளியேறும் பெண்களின் எண்ணிக்கை 2021ல் 24.1 சதவீதமாக இருந்தது, 2021ல் 28.5 சதவீதமாக குறைந்துள்ளது.

குடும்பப் பின்னணி அறிக்கையை (FBR), பாலினப் பாகுபாடு கொண்டதாக சிலர் கருதுவது, ஒப்பீட்டளவில் சரிவுக்கு முக்கியக் காரணம் என்று அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருவதால், பல பெண்கள் புலம்பெயர் தொழிலாளர்களாக செல்கின்றனர். எனினும், அவர்களில் கணிசமான எண்ணிக்கையானவர்கள் குடும்ப பின்னணி அறிக்கையை பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இந்நிலையில், அவர்களில் சிலர் விமான நிலையத்தில் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் பதிவு செய்யாமல், உத்தியோகபூர்வமற்ற வழிகளை நாடி சட்டவிரோதமாக வௌிநாடுகளுக்குச் செல்கின்றனர் என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு அதிகமாக தொழில்வாய்ப்புக்களை கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் குவைத் ஆகிய தலைமையாக கொண்ட மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் வழங்கியுள்ளன. அதாவது 84.8 வீதமான தொழில்வாய்ப்புக்களை வழங்கியுள்ளமை குறிப்படத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image