சவுதியில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி
சவுதி அரேபியாவில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2020ம் ஆண்டு இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் சவுதி அரேபியாவில் பணியாற்ற செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 257,200 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது என்று மனித வளம் தொடர்பில் அந்நாட்டு புள்ளிவிபரங்களுக்கான பொது அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, அந்நாட்டு தொழிற்சந்தையில் பணிபுரியும் சவுதி பிரஜைகளின் எண்ணிக்கை காலாண்டில் 81,900 ஆக அதிகரித்துள்ளது அதற்கமைய, மேற்கூறப்பட்ட அதே காலாண்டுகளில் 3.25 மில்லியனை எட்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
2020ம் ஆண்டு முதலாம் மற்றும் இரண்டாம் காலப்பகுதியில் கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக சவுதி அரேபிய தொழிற்சந்தைபாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.