மன்னார் மாவட்டச் செயலகம் உள்ளடங்களாக அரச திணைக்களங்களில் வேலை பெற்றுத் தருவதாக கூறி இளைஞர் யுவதிகளிடம் பெருந்தொகையான பணம் பெறப்பட்டு மோசடி செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.
All Stories
கடவுச்சீட்டுக்கான இணையவழி (Online) விண்ணப்பங்களை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் சமர்ப்பிக்க முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வியற் கல்லூரிகளில் 2018/2020 ஆம் ஆண்டுகளில் டிப்ளமோ நிறைவு செய்த டிப்ளமோதாரிகளுக்கு நியமனம் வழங்கும் பிரதான நிகழ்வு எதிர்வரும் 16 ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற உள்ளது.
2021 டிசம்பர்; 31ம் திகதி தமது சேவைக் காலத்தை நிறைவு செய்த மற்றும் இடமாற்றத்துக்கான கடிதம் கிடைத்த அனைத்து ஆசிரியர்களும் எதிர்வரும் 12ம் திகதி ஆகும் போது, தமது பணி இடத்துக்கு அறிக்கையிட வேண்டும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
ஓய்வு பெற்றுச்செல்லும் ஆசிரியர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களில் ஒரு வருடத்துக்கு ஐயாயிரம் அல்லது ஆறாயிரம் ஆகவே இருந்து வந்திருக்கிறது.
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.
இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2048ஆம் ஆண்டு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே தமது போராட்டமாகும் என்றும் தெரிவித்தார்.
அரச பணியாளர்களுக்கு, ஐந்தாண்டு விடுமுறையில் வெளிநாட்டில் பணியாற்ற வாய்ப்பளிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50% பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெக்க சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
60 வயதிற்குட்பட்ட விசேட வைத்தியர்களின், கட்டாய ஓய்வு குறித்த அமைச்சரவையின் தீர்மானத்தை வலுவிழக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் முன்வைத்த ஆட்சேபனைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு, மின்னஞ்சல் (EMAIL) கணக்குகளை உருவாக்கும்போது, பெற்றோரின் தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டாம் என காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாடாளுமன்றக் குழுவில் தெரிவித்துள்ளனர்.
பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, 2 பில்லியனுக்கும் அதிகமான நிலுவைத் தொகை செலுத்தப்பட வேண்டியுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வங்கிகள், கட்டிடக்கலை வல்லுநர்கள் என பல துறைகளில் ஈடுபடுபவர்கள் இன்று (01) முதல் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.