அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை குறித்து நீதிமன்றின் உத்தரவு

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை குறித்து நீதிமன்றின் உத்தரவு

60 வயதிற்குட்பட்ட விசேட வைத்தியர்களின், கட்டாய ஓய்வு குறித்த அமைச்சரவையின் தீர்மானத்தை வலுவிழக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் முன்வைத்த ஆட்சேபனைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இது தொடர்பான மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர்  நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் முன்னிலையில் ​நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்கள் ஓய்வு பெறுவதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் முன்பு பிறப்பித்த தடை உத்தரவு எதிர்வரும் 6ம் திகதி வரை நீட்டிக்கப்படடுள்ளது.

60 வயதில் விசேட வைத்திய நிபுணர்களுக்கு ஓய்வளிக்கும் அரசாங்கத்தின் முடிவை இரத்து செய்யுமாறு 176 வைத்தியர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கத்தின் விசேட அறிவித்தல்

இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய குழுவினர்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image