இதுவரை நியமனக்கடிதங்கள் வழங்கப்படாத அனைவரும் 15ம் திகதிக்கு முன்னர் நியமனக்கடிதங்கள் வழங்கப்படும் என்று ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்துள்ளார் என்று அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
51,000 பட்டதாரிகளை நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கை கடந்த மாதம் மூன்றாம் திகதி மேற்கொள்ளப்பட்டது என்றும் எனினும் இன்னமும் நியமனக் கடிதங்கள் பெறாதவர்க்ள உள்ளனர் என்றும் அபிவிருத்தி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்துள்ளார். அதற்கு மேலதிகமாக இவ்வாண்டு ஜனவரி மாதம் நிரந்தர சேவையில் இணைக்கபடவிருந்த பயிலுநர் பட்டதாரிகள் பயிற்சி பெற்ற நிறுவனங்களில் இருந்து வேறிடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் இந்த செயற்பாடுகளில் உள்ள குறைப்பாடுகள் காரணமாக பலருக்கு ஒரு மாத கொடுப்பனவு இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பட்டதாரிகள், பயிலுநர் பட்டதாரிகளுக்கான அறிவித்தல்!
எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
பட்டதாரிகளுக்கான பயிற்சி கொடுப்பனவு தொடர்பில் அறிவித்தல்
பயிலுநர் பட்டதாரிகளுக்கான கொடுப்பனவு தொடர்பான அமைச்சின் விசேட அறிவித்தல்
நிரந்தர சேவையில் இணைக்கப்பட்டபோதிலும் இதுவரை நியமனக்கடிதம் கிடைக்கப்பெறாதவர்களுக்கும் கடந்த மாத சம்பளம் இதுவரை கிடைக்கவில்லை. அப்பிரச்சினையை தீர்ப்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்தார். இம்மாதம் 15ம் திகதியாகும் போது நிரந்தர நியமனம் வழங்கப்படாத பட்டதாரியொருவர் இருப்பாராக இருந்தால் பிரச்சினையை அடையாளங்கண்டு மாவட்டச் செயலகத்தின் ஊடாக உரிய பிரச்சினையை தீர்த்து நியமனக் கடிதம் கையளிக்கப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்தார்.
பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் பயிலுநர் பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தொடர்பில் தமது சங்கம் நேற்று ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் கலந்துரையாடியபோது இவ்வுறுதி மொழியை வழங்கினார் என்றும் சந்தன சூரியராய்ச்சி தெரிவித்தார்.
நிரந்தர நியமனத்திற்காக காத்திருக்கும் பட்டதாரிகளின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு புதிய சேவை யாப்பை தயாரிக்க வலியுறுத்தல்
தொடர்ந்தும் பிரச்சினைகளுக்கு உள்ளாகிவரும் பட்டதாரி பயிலுநர்கள் - டிப்ளோமாதாரிகளுக்கான அறிவித்தல்