மருத்துவர்களின் உரிமைக்காய் புதிய தொழிற்சங்க கூட்டமைப்பு உருவாக்கம்
புதிதாக மருத்துவர்கள் மற்றும் சிவில் உரிமைக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையில் பணியாற்றும் மருத்துவர்களின் உரிமைகளுக்காகவும் சிவில் உரிமைகளுக்காகவும் மற்றும் தொழிலாளர் உரிமைக்காகவும் முன்னிற்கக்கூடிய அரசியல் சார்பற்ற வகையில் செயற்படக்கூடிய வகையில் இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டமைப்பினால் மக்களை தௌிவுபடுத்தும் வகையில் வௌியிடப்பட்ட முதலாவது ஊடக அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.
அரசியல் கட்சி பேதமின்றி மருத்துவர்களுக்காக, தொழிற்சங்க உரிமைகள், அடிப்படை மற்றும் சிவில் உரிமைகள், சுகாதார அமைப்பில் பணியாற்றும் மருத்துவர்களின் தொழிலாளர் உரிமைகள் போன்றவற்றிற்காக வாதிடும் தொழிற்சங்க இயக்கத்தின் இடைவெளி கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்டது. இந்த அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, இந்த நூற்றாண்டிற்கு ஏற்ப நாட்டில் ஒரு பெருமை வாய்ந்த மருத்துவத் தொழிலை உருவாக்கி, ர்வதேசமயமாக்கல் மூலம் நாட்டில் மருத்துவத் தொழிலை தேசிய வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஒரு செயலூக்க சக்தியாக மாற்றும் நோக்கில் புதிய தொழிற்சங்க இயக்கம் உருவாக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நான்கு பிரதான நோக்குகளை கொண்டு இக்கூட்டமைப்பு இயங்கவுள்ளது.
அவையாவன,
1. மருத்துவர்களின் தொழில்முறை உரிமைகளைப் பாதுகாத்தல், அடிப்படை மனித உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் மருத்துவர்களின் தொழிலாளர் உரிமைகளுக்காக வாதிடுதல்.
2. இலவச மருத்துவ சேவை வழங்கும் ஒரு நாடாக நோயாளரகளின் உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்காக எவ்வித நிபந்தனைகளுமின்றி முன்னிற்றல்
3. இலவச சுகாதார சேவையை பாதுகாக்கும் வகையில் சுகாதார சேவையை மென்மேலும் அபிவிருத்தி நிலைக்கு கொண்டு செல்வதற்காக பொது நோக்குடன் சுகாதார சேவையின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்புக்களுடனும் ஒன்றிணைந்து செயற்படுவதுடன் நாட்டின் தேசிய அபிவிருத்திக்காகவும் சுகாதாரசேவையை தேசிய மற்றும் சர்வதே ரீதியாக உயர் நிலைக்கு கொண்டு செல்ல செயற்படுதல்.
4. நாட்டின் பொது மக்களின் முன்னேற்றத்திற்காக தேசிய அபிவிருத்தி செயற்பாடுகளுக்காகவும் சுகாதாரதுறை மற்றும் சுகாதரத்துறை பலப்படுத்துவதற்காக ஒத்துழைப்பு வழங்குவதுடன ஏனைய பலதரப்பட்ட களங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து தேசிய நோக்கங்களுக்காக செயல்படுத்துதல்.
தொழிற்சங்கம் என்றவகையில் மருத்துவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தொழிற்சங்க உரிமைகளுக்காக முன்னின்றாலும் எந்தவொரு காரணத்திற்காகவும் குற்றஞ்சாட்டப்படும் வைத்தியர்கள், உயர் அதிகாரிகள் தொடர்பிலோ, சார்பாக செயற்பாடப்போவதில்லை என்பதுடன் நிபந்தனைகளின்றி குறித்த அதிகாரிகளுக்கு எதிராக தொழிற்சங்க செயற்பாடாக குரல் கொடுக்கவும் மக்கள் முன் உண்மையை கொண்டு வர பின்நிற்கப்போவதில்லை என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது