தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு எட்டப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தின் மூன்றாவது நாளாக நடைபெறும் இப்போராட்டமானது கடந்த வருடம் 7ம் மாதம் பல கோரிக்கைகள் முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் தொடர்சியாகும் என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தாதியர்களுடைய அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் இணக்கம் காணப்படவில்லை. மேலதிக நேர கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பான அனுமதியை அமைச்சரவையில் அனுமதி பெற்று நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலதிகக் கொடுப்பனவின் அளவை அதிகரிப்பதற்கு 2014ம் ஆண்டு திரைசேரி அனுமதி வழங்கியிருந்தபோதிலும் 2015ம்ஆண்டு ஆட்சிக்கு வந்த புதிய அரசு அடிப்படை சம்பளத்தை அதிகரித்ததையடுத்து அச்சம்பள விகிதத்திற்கேட்ப ஆண்டுதோறும் மேலதிக கொடுப்பனவு அளவு அதிகரிக்கப்பட்டது.

எனினும் 2020ம் ஆண்டுடன் அவ்வதிகரிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதிக்கும் பொது சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம் தலைவரான முறுத்தெட்டுவே ஆனந்த தேரருடனுக்கு இடையிலான கலந்துரையாடலில் அதிகரிப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டபோதிலும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image