தொழிலற்ற பட்டதாரிகளுக்கு உடன் தொழில் வழங்குவது தொடர்பான கருத்து
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிற்போடப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்துமாறு தொழிலற்ற பட்டதாரிகளின் ஒன்றிணைந்த மத்திய நிலையத்தின் இணைப்பாளர் மஹேஷ் அம்பேபிட்டிய கோரிக்கை விடுத்துள்ளார்.
பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வழங்கப்பட்ட பேச்சுவார்த்தையை துரிதப்படுத்துமாறு கோரி அவரின் கையொப்பத்துடன் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு அமைய, பட்டதாரிகளை தொழில்மயப்படுத்தும் விடயத்தில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும், கொவிட் பரவல் காரணமாக பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் குறித்த பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்துவதற்கான திகதி ஒன்றை வழங்குமாறு அவர் அந்த அறிக்கையின் மூலம் கோரியுள்ளார்.
பயிலுனர் பட்டதாரிகள் - டிப்ளோமாதாரிகளுக்கு விசேட அறிவித்தல்
60,000 தொழில்வாய்ப்பில் எஞ்சியோரின் நியமனம் தொடர்பில் அரசின் நிலைப்பாடு