பெண்களுக்கு எதிரான அநீதிகளை விசாரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு

பெண்களுக்கு எதிரான அநீதிகளை விசாரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு

இலங்கையில் பெண்களுக்கு எதிராக இடம்டபெறும் அநீதி மற்றும் வன்முறைகள் தொடர்பில் விசாரணை செய்தற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு சபாநாயகரிடம் கோர பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு தீர்மானித்துள்ளது.

சபாநாயகரின் அனுமதியுடன் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் திகதி இப்பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க தீர்மானிக்கப்ப்டுள்ளது. இக்குழுவில ஆண் பெண் என இருபாலாரும் உள்வாங்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

ஏதாவது ஒரு பதவிக்கு தமது திறமை, தகமை மற்றும் இயலுமைகளை ஏற்ப ஏதாவது ஒரு பதவிக்கு செல்லும் போது பெண்கள் எதிர்நோக்கும் துன்புறுத்தல்கள். வன்முறைகள் மற்றும் வேறுபாடுகளை கருத்திற்கொண்டு அவற்றை விசாரிப்பதற்கு இயலுமையுள்ள பூரண அதிகாரத்துடன் கூடிய வகையில் இப்பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படவேண்டும் என்று பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பின் தலைவி, சுகாதார சேவைகள், தொற்றுநோய் மற்றும் கொவிட் 19 கட்டுப்பாட்டு விவகார இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image