குடாஓயா Blessed பெண்கள் அமைப்பின'; மகளிர் தின நிகழ்வு

குடாஓயா Blessed பெண்கள் அமைப்பின'; மகளிர் தின நிகழ்வு

மகளீர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக அட்டன் குடாஓயா பிரதேசத்தில் இயங்கிவரும் Blessed பெண்கள் அமைப்பனால் சர்வதேச மகளிர் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.

அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.சுதர்ஷினி தலைமையில் குடாஓயா சர்வோதய மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் வி.குணரட்னம், சர்வோதய கள உத்தியோகத்தர் வி.சுமதி, சர்வோதய பாலர் பாடசாலை ஆசிரியர் எஸ்.தங்கமலர், நவயுக இணைப்பாளர் மார்கட் அந்தனி, கள உத்தியோகத்தர் தவசிதா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பி.சுதர்ஷினி அவர்களால் அமைப்பின் எதிர்கால நடவடிக்ககைள் தொடர்பாக விளக்கமளித்தார். அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மகளீர் அமைப்பானது மகளிர் சுய தொழில் முயற்சியாண்மையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

g4

g2

g1

Author’s Posts