எட்டு வருட போராட்டத்தில் வெற்றி கண்ட பெண்!

எட்டு வருட போராட்டத்தில் வெற்றி கண்ட பெண்!

குவைத் பணிப்பெண் கற்பழிப்பு 8 வருட போராட்டத்திற்கு பிறகு நீதிபெற்று தாயகம் திரும்பினார்.

குவைத்தில் ஒக்டோபர் 1, 2012 நடந்தேறிய கொடூரமான சம்பவம் அந்த நேரத்தில் குவைத்தில் இருந்த யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அன்றைய தினம் அதிகாலையில் போக்குவரத்து சோதனை என்று சாலையில் சென்ற வாகனத்தை மடக்கி அதில் இருந்த இரண்டு பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்மணிகள் ஆவணங்கள் சோதனை செய்யபட்டது.

இதில் ஒருவருக்கு ஆவணம் இல்லை என்பதை அறிந்து மற்ற பெண்மணியை செல்ல அனுமதித்து பின்னர் இந்த பெண்மணியை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி வாகனத்தில் கொண்டு சென்று South Surra பாலைவன பகுதியில் வைத்து குவைத் போக்குவரத்து காவல்துறை அதிகாரி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டார்.

இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே கத்தியால் கழுத்து முதுகு உள்ளிட்ட பல இடங்களில் பலமுறை குத்தப்பட்ட நிலையில் அவள் இறந்தார் என்று போட்டுவிட்டு சென்றார். இதையடுத்து சிறிது நேரத்தில் நினைவு திரும்பிய நிலையில் எப்படியோ சாலை ஓரம் வரையில் நகர்ந்து வந்தார் விழுந்தார்.

நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட இறந்த நிலையில் கிடந்தது அந்த பெண்மணி ஒரு டாக்ஸி ஓட்டுநர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். நீண்ட சிகிச்சைக்கு பின்பு உயிர் பிழைத்தார். அந்த பெண்மணி சம்மந்தப்பட்ட நபரை அடையாளம் காட்டிய நிலையில் வழக்கு விசாரணையின் இறுதியில் நீதிமன்றம் அண்மையில் மரண தண்டனை விதித்தது.

இதையடுத்து நீதிக்காக போராடிய பிறகு அதில் வெற்றி கண்ட அந்த பெண்மணி ஞாயிற்றுக்கிழமை(29/11/20) காலை பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு தன்னுடைய வீட்டிற்கு விமானம் மூலம் கிளம்பியுள்ளார்

 Srilankans in Kuwait

Author’s Posts