பல துறையினருக்கு விசேட கொடுப்பனவு- நிதியமைச்சர்

பல துறையினருக்கு விசேட கொடுப்பனவு- நிதியமைச்சர்

புத்தாண்டில் அரச ஊழியர்கள், ஓய்வுபெற்றோர், விவசாயிகள் உட்பட பலருக்கு விசேட கொடுப்பனவுகளை வழங்கவுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று (03) அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் இரவு இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே நிதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அரச ஊழியரகளுக்குள்ள பொருளாதார பிரச்சினையை கருத்திற்கொண்டு இம்மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுவதாக நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, ஓய்வு பெற்றுள்ள 666 480 அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் 5,000 மேலதிககொடுப்பனவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் கருத்து தெரிவித்த நிதியமைச்சர், சமுர்தி பயனாளிகளுக்கு மாதாந்த கொடுப்பனவான 3,500 ரூபா தொகையுடன் ஜனவரி மாதம் தொடக்கம் 1000 ரூபா மேலதிகமாக வழங்கவும் ஒரு மூட்டை நெல்லுக்கு மேலதிகமாக 75 ரூபாவும் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக 5000 ரூபா வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

20 பர்ச்சஸ் காணியில் வீட்டுத் தோட்டம் செய்யும் விவசாயிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

ஏக்கருக்கு குறைவாக 20 பர்ச்சஸுக்கு அதிகமான காணியில் வீட்டுத் தோட்டம் செய்யும் விவசாயிகளுக்கு விவசாயத்திற்காக 10,000 ரூபாவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 15 கிலோ சோள மா கிலோ 80 ரூபாவுக்கு வழங்கல், இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியவசிய உணவு, மருந்து பொருட்களுக்கு முழுமையான வரி விலக்களித்தல், அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு 5000 ரூபா விசேட கொடுப்பனவு வழங்கல் போன்ற தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image