நான்கு வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு கோரிக்கை

நான்கு வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு கோரிக்கை

நாட்டில் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு 4 வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தேசிய நாளிதழ்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

நாளுக்கு நாள் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் மரண எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச்சென்றால் சமாளிப்பது கடினமான விடயம் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்று சுகாதாரத்துறையை சுட்டிக்காட்டி தகவல்கள் வௌியாகியுள்ளன.

தற்போது நாட்டில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை மூவாயிரமாகவும் மரணிப்பவர் எண்ணிக்கை நூறாகவும் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 13 நாட்களில் மாத்திரம் கொவிட் தொற்றினால் இறந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

வைத்தியசாலைகளில் உள்ள பிணவறைகளில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைகளில் உள்ள கொவிட் நோயாளர்களுக்கான வாட்டுக்களில் கொள்ளவை விடவும் அதிகமாக நோயாளர்கள் நிரம்பி வழிவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவ்வாறு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமானால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது போகும் என்றும் எனவே நாட்டை முடக்குவதே சிறந்தது என்றும் சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image