போலி நிறுவனங்களை நிறுவி விசா வர்த்தகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆசிய நாட்டினர் ஒருவரை கட்டார் குற்றப் புலனாய்வுப் பொது தலைமையக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
விசா வர்த்தகம் மற்றும் சட்டவிரோத விசா பரிவர்த்தனைகள் தொடர்பாக திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அமைக்கப்பட்ட விசேட குழுவின் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்படும் போது குறித்த நபரின் வசமிருந்த மடிக்கணினி, 13 ஏடிஎம் அட்டைகள், 4 அடையாள அட்டைகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த நபர் குற்றங்களை ஏற்றுக்கொண்டதையடுத்து நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டார்.
சமூக வலைத்தளத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம்- கட்டார்
நடத்திய விசாரணையில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார். அதன்படி, இது தொடர்பாக பின்பற்றப்பட்ட நடைமுறைகளை முடிக்க நீதித்துறை அதிகாரிகளுக்கு பறிமுதல்களுடன் அவர் பரிந்துரைக்கப்பட்டார்.
பொறுப்புக்கூறலைத் தவிர்ப்பதற்கும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குக் கட்டுப்படுவதற்கும் விசா வர்த்தகர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் துறைசார் அதிகாரிகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.