சமூக வலைத்தள பாவனையாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு கட்டார் அரசு எச்சரித்துள்ளது.
நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் தகவல்கள், படங்கள் பரிமாற்றம் செய்வது, இன முறுகல்களை ஏற்படுத்த காரணமாக இருப்பது மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை பயன்படுத்துவது என்பவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்டார் உள்நாட்டலுவல்கள் அமைச்சு எச்சரித்துள்ளது.
அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் இனரீதியான பேச்சுக்களை வௌியிட்ட பலர் கைது செய்யப்பட்டதையடுத்து அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சு இவ்வறிவிப்பை வௌியிட்டுள்ளது.