கட்டாரில் பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வரையில் இவ்வறிவிப்பு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன் கிழமை (09) திகதி நடந்த வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் , மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளான , சந்தைகள், கண்காட்சி நடைபெறும் இடங்களில் முகக் கவசத்தை அணிந்து கொள்ளும் படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நாலாபுறமும் அடைக்கப்பட்ட மசூதிகள், பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள், மற்றும் பாடசாலைகள் போன்றவற்றில் தொடர்ந்து முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொது மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் அனைத்து ஊழியர்களும் (உணவக ஊழியர்கள) முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.
பொதுவிடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லையென்றாலும் சுய பாதுகாப்புக்காக தொடர்ந்து அணிவது அனைவருக்கும் பாதுகாப்பாய் அமையும் என்று சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
வீட்டுப் பணியாளர்களுக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்தது கட்டார்!
கட்டாருக்கு வீட்டுப் பணியாளர்களாக செல்கிறீர்களா? சட்டங்களை அறிந்துகொள்ளுங்கள்
கட்டார் செல்லும் இலங்கையர்கள் கவனத்திற்கு!