வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அதிகபட்ச விலையை கட்டார் அரசு நிர்ணயித்துள்ளது
வீட்டுப் பணியாளர்கள், வீட்டுத் தொழிலாளர் சந்தையைக் கட்டுப்படுத்தவும் ஏகபோக நடைமுறைகளைத் தடுக்கவும். கட்டாரில் உள்ள வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு(MOCI) மற்றும் தொழில் அமைச்சு (MOL) ஆகியன வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் ஆட்சேர்ப்பு செலவுகள் நியாயமற்ற முறையில் அதிகரிப்பதை எதிர்த்துப் போராடுதல் ஆகியவற்றின் கூட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக அதிகபட்ச விலையை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வீட்டுப்பணிப்பெண்களாக இந்தோனேசியாவில் இருந்து அழைக்கப்படும் பெண்களுக்கு 17,000 கட்டார் ரியாலும் இலங்கையிலிருந்து அழைக்கப்படுவோருக்கு 16,000 கட்டார் ரியாலும் பிலிப்பைன்ஸிலிருந்து அழைக்கப்படுவோருக்கு 15,000 கட்டார் ரியாலும் பங்களாதேஷ் மற்றும் இந்தியாவிலிருந்து அழைக்கப்படுவோருக்கு 14,000 கட்டார் ரியாலும் கென்யா மற்றும் எத்தியோப்பியாவிலிருந்து அழைக்கப்படுவோருக்கு 9,000 கட்டார் ரியாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட தினத்திற்கு அடுத்த நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் இந்தத் தீர்மானத்தை, ஒவ்வொருவரும் தங்கள் அதிகார வரம்பிற்குள் செயற்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்பு அலுவலகங்களால் செய்யப்படும் துஷ்பிரயோகங்கள் அல்லது மீறல்கள் அல்லது வீட்டுப் பணியாளர்களின் ஆட்சேர்ப்புக்கான அதிகபட்ச விலையை நிர்ணயிக்கும் முடிவை செயல்படுத்தத் தவறும்பட்சத்தில் முறையிடுமாறு கட்டார் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு அந்நாட்டு குடிமக்கள், வதிவிடவாளர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளது.