கட்டாருக்கு வீட்டுப் பணியாளர்களாக செல்கிறீர்களா? சட்டங்களை அறிந்துகொள்ளுங்கள்

கட்டாரில் வீட்டுத் தொழிலாளர்களாக ( Domestic Worker ) பணி புரிவோர் அறிந்திருக்க வேண்டிய சட்டங்கள் மற்றும் அவர்களது பொறுப்புக்கள் பற்றிய தெளிவுகள் அடங்கிய காணொளியை அந்நாட்டு நிர்வாக மேம்பாட்டு தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.

ஆங்கில மொழியில் வழங்கப்பட்டுள்ள அக்காணொளியில் அடங்கியுள்ள விடயங்கள்

தொழிலைப் பெற்றுக்கொள்ள யாருக்கும் எந்த வித கட்டணத்தையும் செலுத்த தேவையில்லை
வேலை வழங்கியதற்காக ஸ்பொன்சர் உங்களது சம்பளத்தில் குறைப்புசெய்ய முடியாது.
பணி புரிய ஆரம்பிக்கும் முன் பணியாளர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
கட்டாரின் வீசா மையங்கள் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அந்தந்த நாடுகளில் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் இருக்கும் விடயங்கள் பணியாளர்கள் அறிந்திருப்பது அவசியம்.
வேலைவாய்ப்பு ஒப்பந்த பிரதி ஒன்றை பணியாளர்கள் கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
கடவுச்சீட்களை தாங்களுடன் வைத்துக்கொள்ளும் உரிமை பணியாளர்களுக்கு உண்டு. கட்டார் அலுவலக வேலைகளுக்காக ஸ்பொன்சர் உங்களுடைய கடவுச்சீட்டை வாங்கினால் அவர்கள் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்
பணியாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு போன்றவை இலவசமாக வழங்கப்படல் வேண்டும். கட்டணம் அறவிடப்படமுடியாது
சம்பளம் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். மேலும் மாதாந்தம் 3ம் திகதிக்கு முன்னர் சம்பளம் செலுத்தப்படல் வேண்டும்.
நாள் ஒன்றுக்கு 10 மணித்தியாலங்கள் மட்டுமே பணி புரிய வேண்டும்
வாரத்துக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை வழங்கப்படல் வேண்டும்
மருத்துவ வசதிகள் இலவசமாக வழங்கப்படல் வேண்டும். குறிப்பாக ஆரோக்கிய அட்டை (Health Card) ஸ்பொன்சரினால் பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும்.
வருடத்துக்கு 3 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படல் வேண்டும். இது தொடர்பாக தொழில் வழங்குநரிடம் கலந்துரையாடுங்கள்.
ஒப்பந்த காலம் முடிந்த பின்னர் பணிக்கொடை (End of Service) கட்டாயம் வழங்கப்படல் வேண்டும்.
ஒப்பந்த இரத்துச் செய்யும் அதிகாரம் பணியாருக்கும் உண்டு. தொழில் வழங்குநருக்கும் உண்டு.
மேலதிக தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய 16008 என்ற இலக்கத்துக்கு அழையுங்கள்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image