திருப்திகரமான சேவையில்லையேல் சிறைத்தண்டனை- ஓமான்

திருப்திகரமான சேவையில்லையேல் சிறைத்தண்டனை- ஓமான்

வாடிக்கையாளரை திருப்திகரமான வகையில் சேவை வழங்காத ஊழியர் ஒருவருக்கு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது ஓமான் நீதிமன்றம்.

ஓமானின் வடக்கு அல் பட்டினா பகுதயில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வாடிக்கையாளருக்கு திருப்திகரமான சேவை வழங்காமையினால் 4 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தனது வீட்டுக்கு அலங்காரப் பொருட்கள், நிறப்பூச்சு மற்றும் கற்கள் பதித்து அலங்கரிக்கப்பட்டதாகவும் இரு மாதங்களில் வீட்டின் உட்சுவறில் பதிக்கப்பட்ட கற்கள் கழண்டு விழுந்து தளபாடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் வாடிக்கையாளர் நுகர்வோர் பாதுகாப்பு தலைமையகத்திற்கு முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த நபர் கைது செய்து விசாரணை செய்யப்பட்டதுடன் 4 மாத சிறைத்தண்டனையும் வழங்கப்படடுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் நிறுவன உரிமையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டபோதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து நுகர்வோர் அதிகாரசபைக்கு முறையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வருமான வரி சட்டத்தை மீறிய வௌிநாட்டவர்களுக்கு 2000 ஓமான் ரியால் அபராதம்

வௌிநாட்டவர்களின் வீசா புதுப்பித்தல் தொடர்பில் ஓமான் புதிய அறிவிப்பு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image