வருமான வரி சட்டத்தை மீறிய வௌிநாட்டவர்களுக்கு 2000 ஓமான் ரியால் அபராதம்

வருமான வரி சட்டத்தை மீறிய வௌிநாட்டவர்களுக்கு 2000 ஓமான் ரியால் அபராதம்

வருமான வரி சட்டங்களை மீறிய இரு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2000 ஓமான் ரியால் அபராதமும் 6 மாத சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என்று ஓமான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரசபை ஒரு அறிக்கையில், "வருமான வரிச் சட்டம் எண். 28/2009 ஐ மீறியதற்காக வரித் தேவைகளுக்கு இணங்காத ஓமானில் இயங்கிய இயங்கும் நிறுவனத்திற்கு எதிராக அமேரட்டின் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை முதற்தடவையாக வழங்கியுள்ளது என்று அதிகாரிகள் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும், வருமான வரிச் சட்டத்தின் கீழ் கட்டாயமாக வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதில் இருந்து வேண்டுமென்றே தவிர்த்ததற்காகவும், வரி இணக்கம் தொடர்பான சரியான தரவுகளை வேண்டுமென்றே வழங்கத் தவறியதற்காகவும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஆறு மாத சிறைத்தண்டனை மற்றும் OMR 2,000 அபராதம் விதிக்க நீதிமன்றம் முடிவு செய்ததுடன், தண்டனைக் காலம் முடிந்ததும் அவர்கள் நிரந்தரமாக நாட்டிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image