வௌிநாட்டவர்களின் வீசா புதுப்பித்தல் தொடர்பில் ஓமான் புதிய அறிவிப்பு

வௌிநாட்டவர்களின் வீசா புதுப்பித்தல் தொடர்பில் ஓமான் புதிய அறிவிப்பு

வௌிநாட்டுத் தொழிலாளர்களுடைய வதிவிட வீசா தொடர்பில் புதிய சட்டத்தை ஓமான் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கமைய வதிவிட வீசா காலாவதியாகும் திகதிக்கு 15 நாட்களுக்கு முன்பாக அதனை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே வதிவிட வீசா காலாவதியாவதற்கு 30 தினங்களுக்கு முன்பதாக புதுப்பிக்க வேண்டும் என்ற சட்டமே தற்போது திருத்தப்பட்டு 15 நாட்களுக்கு முன்னர் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியிருப்பு சட்டத்தின்படி ஓமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அரசாணை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசா வழங்கல் செயற்பாடுகளை ஓமான் சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் ஆரம்பித்தது. இந்நிலையில் அந்நாட்டு தொழில் அமைச்சின் வழிகாட்டல்களுக்கமைய வதிவிட வீசா புதுப்பித்தலில் பலர் கவனம் செலுத்தி வருவதாகவும் இச்செயற்பாடு ஒன்லைன்னில் இடம்பெற்று வருவதாகவும் தகவல்க்ள தெரிவிக்கின்றன.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image