ஓமான் அரச துறைகளில் 300,000 மணிக்கும் அதிகமான பகுதி நேர வேலைவாய்ப்புகள்

ஓமான் அரச துறைகளில் 300,000 மணிக்கும் அதிகமான பகுதி நேர வேலைவாய்ப்புகள்

ஓமான் அரச துறைகளில் பகுதி நேர வேலைவாய்ப்புகள் காணப்படுவதாக அந்நாட்டு தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

300,000 மணிக்கும் அதிகமான பகுதி நேர வேலைவாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு கல்வித் தகமைகள் உடையவர்களுக்கு இப்பகுதி நேர வேலைவாய்ப்புகள் காணப்படுகிறது.

பகுதி நேர அடிப்படையில் 308,200 மணிநேர வேலை வாய்ப்புகள் காணப்படுகின்றன. அரசாங்க வேலை அலகுகளின் தேவைகள் மற்றும் பல்வேறு கல்வித் தகுதிகளுக்கு அமைவாக இவ்வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன என்று ஓமான் தொலைகாட்சி நேற்று (14) அறிவித்தது.

2022 ஆம் ஆண்டிற்கான முதலாவதும், மற்றும் நிர்வாக தொழில்நுட்ப பிரிவுகளுக்கான வேலை விளம்பரங்களின் வரிசையில் இரண்டாவது முறையாகவும் இவ்வறிப்பு வௌியாகியுள்ளதாக ஓமான் தொலைக்காட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image