ஆள் நடமாட்டம், வாகன போக்குவரத்து மற்றும் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க ஓமான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொவிட் தடுப்பு நடவடிக்கை குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய இம்மாதம் 8ம் திகதி இரவு 7.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவு விற்பனை நிலையங்கள், எரிவாயு விற்பனை நிலையங்கள், சுகாதார நிறுவனங்கள் மற்றும் மருந்தகங்கள் என்பன திறப்பதற்கும் பொருட்களை வீடுகளுக்கு விநியோகிப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அந்நாட்டு அரசதுறை ஊழியர்கள் எதிர்வரும் 9ம் திகதி தொடக்கம் 11ம் திகதி வரை வீடுகளில் இருந்து பணியாற்றுவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது. அதேவேளை தனியார் துறை நிறுவனங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்து பணியாற்றுவதனூடாகவும் பணியிடங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதனூடாகவும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
றழமான் சமய வழிபாடுகள், றமழான் விற்பனைகள் பாராம்பரிய சந்தைகள் என்பவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை, பூங்காக்கள் மற்றும் போன்ற அனைத்து இடங்களிலும் அனைத்து விதமான ஒன்றுகூடல்கள், கொண்டாட்டங்கள் என்பவற்றுக்கு றமழான் காலத்தில் தடை விதித்துள்ளது.
நாட்டில் கொவிட் 19 பரவலை தடுக்கும் வகையிலும் சுகாதார சிக்கல்களை தவிர்க்கவும் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு கொவிட் தடுப்புக்கான உயர்குழு சுட்டிக்காட்டியுள்ளது.