ஓமான் அரசாங்கம் அறிவித்துள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 24ம் திகதி வரை வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
அந்நாட்டு தொழில் அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் உள்நாட்டு குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று இம்மாதம ஜூன் மாதம் 13ம் திகதி அறிவித்திருந்தது. விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதி ஜூன் மாதம் 24ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்நாட்டு அரச நிறுவனங்களில் காணப்படும் கணக்காளர், சட்ட ஆய்வாளர், கணனி திட்ட வடிவமைப்பாளர், சிவில் பொறியிலாளர், மருந்தாளர், விஞ்ஞான ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர், ஆங்கில ஆசிரியர், உணவு தொழில்நுட்பவியலாளர் உட்பட பல பதவிகளுக்கு தகமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.