துன்புறுத்தல்களுக்குள்ளான இலங்கையர்கள் நாடு திரும்பினர்

துன்புறுத்தல்களுக்குள்ளான இலங்கையர்கள் நாடு திரும்பினர்

ஓமானில் பணி நிமித்தம் சென்று பல்வேறு துன்பங்களை அனுபவித்து நாடு திரும்ப முடியாது இருந்த இலங்கையர்கள் 288 பேர் இன்று (15) காலை 8.30 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

தொழில் நிமித்தம் சென்று தொழில் வழங்குநர்களின் துன்புறுத்தல்களுக்குள்ளாகி நாடு திரும்ப முடியாதிருந்தவர்களை நாட்டுக்கு அழைக்கும் அரசின் திட்டத்தின் கீழ் குறித்த இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 8.35 மணிக்கு ஓமான் மஸ்கட் நகரில் இருந்து புறப்பட்ட குறித்த இலங்கையர்கள் ஶ்ரீலங்கன் விமானசேவையின் யு எல் 206ம் இலக்க விமானத்தில் இலங்கையை வந்தடைந்தனர்.

விமானநிலையத்தை வந்தடைந்தவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதுடன் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Author’s Posts