பொதுத்துறையில் பணியாற்றும் வௌிநாட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்க குவைத் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுத்துறையில் 100 வீதம் குவைத் பிரஜைகளை உள்வாங்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என குவைத் வர்த்தக மற்றும் வர்த்தக அமைச்சர் பைசல் அல் மெட்லெஜ் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் பல அரச நிறுவனங்களில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் குறைத்து அவ்விடத்திற்கு குவைத் பிரஜைகளை உள்வாங்க வேண்டும். இரு வருட காலங்களில் சில அரச நிறுவனங்கள் நூறு வீத குவைத் மயமாக்கலாக்கப்படவேண்டும். கல்வி மற்றும் குற்றத்தடுப்பு பிரிவுகள் என்பவற்றில் 75 வீத குவைத் மயமாக்கல் உள்வாங்கப்படவேண்டும். விவசாயத்துறை போன்ற துறைகளில் குறைந்தது 75 வீத குவைத் மயாமாக்கல் உள்வாங்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
2017ம் ஆண்டு தொடக்கம் குவைத் மயமாக்கல் திட்டத்தை குவைத் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. 2021ஆம் ஆண்டில் அரச துறைகளில் குவைத் நூறு வீதம் குவைத் பிரஜைகளை பணிக்கமர்த்துவது நோக்கமாகும்.
அதற்கமைய 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுமார் 120,000 புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்று வந்தனர். அவ்வெண்ணிக்கையானது தற்போது மிக வேகமாக குறைவடைந்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் அந்நாட்டு சமூக அலுவல்கள் அமைச்சு 120 ஒப்பந்த அடிப்படையிலான புலம்பெயர் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அந்நாட்டில் உள்ள 16 அரச நிறுவனங்களில 13 நிறுவனங்கள் குவைத் மயமாக்கப்பட்டுள்ளது என்று கடந்த செப்டெம்பர் மாதம் அந்நாட்டு சிவில் சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதமளவில் பல்வேறு அரச நிறுவனங்கள் தமது நிறுவனங்களில பணியாற்றி வந்த புலம்பெயர் தொழிலாளர்களின் ஒப்பந்தங்களை இடைநிறுத்தியுள்ளது. குறிப்பாக தொழில்நுட்பம் சாராத துறைகளில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் இவ்வாறு பணிநீக்கம் செய்துள்ளனர். அடுத்தடுத்த வாரங்களில் அரச நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றிய சுமார் 1,183 புலம்பெயர் தொழிலாளர்களின் ஒப்பந்தங்களை அந்நாட்டு அரச நிறுவனங்கள் ரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.